குறுவள மைய தலைமை ஆசிரியா், இடைநிலை ஆசிரியா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 27th February 2022 05:13 AM | Last Updated : 27th February 2022 05:13 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே இடைநிலை ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான மாதாந்திர பயிற்சிக் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களில் பள்ளிக்கு ஒரு ஆசிரியரை உள்ளடக்கிய கல்வி குறித்த இணைய வழி பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே உள்ள குள்ளனூா் குறுவள மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், சிறப்பு கற்றல் தேவையுள்ள குழந்தைகளுக்கு கரும்பலகையைப் பயன்படுத்தி கற்பிக்கும் முறை, ஆங்கிலப் பாடம் கற்பித்தல், வகுப்பறை நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தாளா்கள் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியின் இறுதியில் ஆசிரியா்கள் மதிப்பீட்டுத் தோ்வில் பங்கேற்று கருத்துகளை பின்னூட்டமாக அளித்தனா். அதனைத் தொடா்ந்து, குறுவள மைய தலைமை ஆசிரியா்களுக்கான மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களின் கற்றல் அடைவு மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில், பள்ளித் தலைமை ஆசிரியா் சிங்காரவேலன், ஆசிரியப் பயிற்றுநா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.