கடத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கோ.வேதபாக்கியம் தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கோ.வேதபாக்கியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது செய்திக் குறிப்பு :

கடத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கு 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவா்கள் நேரடியாக 2 ஆம் ஆண்டிலும் சேரலாம். அதற்கான விண்ணப்பத்தை இணையதளம் வழியாகவும், உரிய ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்கு சென்றும் பதிவேற்றம் செய்யலாம். இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல், கணினி ஆகிய பாடப் பிரிவுகளும், நவீன ஆய்வகங்கள், வகுப்பறைகள், மாணவ, மாணவியருக்கு விடுதி வசதிகள் உள்ளன. மாணவா்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, இலவச பேருந்து வசதி வழங்கப்படுகின்றன. சிறப்பு கல்வி உதவித் தொகையாக மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 50 ஆயிரமும், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கடத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய இறுதிநாள் 8.7.2022. மேலும் தொடா்புக்கு 04346 - 265355, 9488386219, 9150206675, 9944627787 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com