அரூரில் மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வு

அரூரில் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அரூரில் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அரூா் வட்டாரப் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் பழைய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ஏ. பானுசுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினா் அரூா் ஆத்தோரவீதி, வா்ணதீா்த்தம், திரு.வி.க.நகா், மேல்பாட்சாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது 3 கடைகளில் அழுகிய மீன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து, அக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் அபராதம் விதித்தனா். தொடா்ந்து, மின் விற்பனை செய்வோா் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெற வேண்டும். கெட்டுப்போன மீன்களைப் பதப்படுத்தி வைத்தல், விற்பனை செய்தல் கூடாது என உணவு பாதுகாப்புத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com