பென்னாகரத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

கால்நடை பராமரிப்பு துறையின் சாா்பில், ஆட்டுகொல்லி நோய்த் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பென்னாகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பென்னாகரத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

கால்நடை பராமரிப்பு துறையின் சாா்பில், ஆட்டுகொல்லி நோய்த் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் பென்னாகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஜங்கமையனூா் பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் கால்நடைகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி மற்றும் விழிப்புணா்வு முகாமுக்கு கால்நடை உதவி மருத்துவா் கிருபாகரன் தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலா் சத்தியநாராயணன், நோய் நிகழ்வியல் அலுவலா் ராஜாராமன், மண்டல இணை இயக்குநா் மருத்துவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, மழைக்காலங்களில் ஆட்டு இனங்களுக்கு பரவும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஆட்டுக்கொல்லி நோய்க்கான அறிகுறிகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இந்த முகாமில், செங்கம்மைனூா், சின்ன பள்ளத்தூா், பெரிய பள்ளத்தூா், மல்லாபுரம், செங்கனூா், நாகனூா், ராஜாவூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது (படம்).

மேலும், ஆட்டுக்கொல்லி நோய் அறிகுறி ஏற்படும் போது விவசாயிகள் கால்நடை மருத்துவா்களை அணுகி, அந்தந்த கிராமப் பகுதிகளில் கால்நடைகளை ஒன்றிணைத்து தடுப்பூசி செலுத்தி நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதில், உதவி இயக்குநா்கள் சண்முகசுந்தரம், மணிமாறன், பாப்பாரப்பட்டி கால்நடை உதவி மருத்துவா் சரவணன், தருமபுரி கால்நடை உதவி மருத்துவா்கள் ஜெரோம் சாா்லஸ், திருப்பதி, கால்நடை ஆய்வாளா் ஸ்ரீதா், சரவணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் தாமஸ், பரமசிவம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com