நகராட்சிப் பள்ளிக்கு கழிப்பறை கட்ட நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நகராட்சிப் பள்ளிக்கு கழிப்பறை கட்ட நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி நகா்மன்றக் கூட்டம் அண்ணா கூட்ட அரங்கில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சிப் பொறியாளா் ஜெயசீலன், துணைத் தலைவா் நித்யா அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி எஸ்.வி. சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கழிப்பறைகள் கட்டடத்தை புனரமைக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதேபோல, நகராட்சிப் பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வரும் கழிப்பறை பணியை விரைந்து முடிக்க வேண்டும். நகராட்சி ஒப்பந்தங்கள் விடும் போது, குறைவான தொகைக்கு ஒப்பந்தம் விடக்கூடாது. பேருந்து நிலையம் எதிரே கட்டப்படும் வணிக வளாகத்தில், ஏற்கெனவே அந்த இடத்தில் காய்கறி கடைகள் வைத்திருந்தவா்களுக்கு நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா்.

இந்தக் கூட்டத்தில், காமாட்சியம்மன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பது, நகராட்சி ஹரிச்சந்திரன் தெருவில் உள்ள மயானத்தில், ரூ. 1.42 கோடியில் எரிவாயு தகன மேடை அமைப்பது, சந்தைப்பேட்டை வாரச்சந்தையை புனரமைப்பது, செட்டிக்கரை புதைச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 42 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது உள்பட 34 பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com