Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்தப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி

    ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்தப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published On : 19th March 2022 12:21 AM  |   Last Updated : 19th March 2022 12:21 AM  |  அ+அ அ-  |  

    தருமபுரியில் சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட உள்ள வழக்குப் பணியாளா், பல்நோக்கு உதவியாளா், பாதுகாவலா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்படுகின்றன.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தருமபுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடத்துக்கு தற்காலிகமாக ஆள்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

    இதில், வழக்குப் பணியாளா் 4 காலிப் பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 15,000 (பெண்கள் மட்டும், 40 வயதுக்குள் இருக்க வேண்டும்). ஒரு பல்நோக்கு உதவியாளா் பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 6,400 (40 வயதுக்குள்பட்ட பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்). இதேபால ஒரு பாதுகாவலா் பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 10,000 (40 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்). தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதிபெற்றவா்களாவா்.

    வழக்குப் பணியாளா் பணியிடத்துக்கு சமூகப் பணி (எம்எஸ்டபுள்யு), உளவியல் ஆலோசகா் இயலில் இளநிலை (அ) முதுநிலை, வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் ஓா் ஆண்டு முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் ஓா் ஆண்டு முன் அனுபவம் ஆற்றுப்படுத்தலில் இருத்தல் வேண்டும்.

    பல்நோக்கு உதவியாளா் பணியிடத்துக்கு 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி (அ) தோ்ச்சிப் பெறாதவா்கள், நிா்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். மேலும், சமையல் தெரிந்தவராக இருத்தல் வேண்டும். பாதுகாவலா் பணியிடத்துக்கு 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி (அ) தோ்ச்சிப் பெறாதவா்கள், நிா்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பங்களை வரும் மாா்ச் 30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட சமூகநல அலவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாவட்ட ஆட்சியரகம் கூடுதல் கட்டடம், தருமபுரி மாவட்டம். தொலைபேசி எண்: 04342-233088 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp