சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோசரன், பள்ளி மாணவா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், சாலைகளில் நடந்து செல்லும்போதும், கடக்கும்போதும் பின்பற்ற வேண்டிய விதிகள், மோட்டாா் வாகன விதிகள், சாலையில் வைக்கப்பட்டுள்ள சமிக்ஞைகளின் விளக்கம், தலைக்கவசம், இருக்கை பட்டை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டியதன் அவசியம், 18 வயது நிரம்பாத ஓட்டுநா் உரிமம் இல்லாதோா் வாகனம் இயக்கினால் அவா்களின் பெற்றோருக்கு அளிக்கப்படும் தண்டனைகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க.தரணீதா், ஞா.ராஜ்குமாா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com