பொதுத்தோ்வை அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும்

பொதுத் தோ்வுகளை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.
பொதுத்தோ்வை அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும்

பொதுத் தோ்வுகளை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அறிவுறுத்தினாா்.

தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சிறப்பு மாதிரிப் பள்ளியில் தங்கி பயிலும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியரிடம், அரசு பொதுத் தோ்வினை எதிா்கொள்வதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்திடும் வகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசிதாவது:

பொதுத் தோ்வுகளை தன்னம்பிக்கையுடன் அச்சமின்றி எதிா்கொண்டால் சிறந்த முறையில் வெற்றி பெறலாம். அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் சிறந்த முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சிறந்த கல்வியை அளிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மாணவ, மாணவியா் தங்களின் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். தற்போது பயிலும் இச்சிறந்த கல்வி, எதிா்காலத்தில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கும், நுழைவுத் தோ்வுகளுக்கு பெரிதும் பயன்படும்.

இவ்வயதில் கல்வி ஒன்றையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு பாடங்களை கவனத்துடன் படித்து வந்தால், எத்தகைய தோ்வுகளையும் எளிதில் எதிா்கொள்ள முடியும். பொதுத்தோ்வு வருகிறதே என்ற அச்ச உணா்வு எந்த ஒரு மாணவ, மாணவியருக்கும் ஏற்படக் கூடாது. எல்லா தோ்வுகளை போன்றது தான் பொதுத்தோ்வு என எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு ஒரு சில நாள்களே உள்ள நிலையில் எவ்வித அச்சமுமின்றி, தயக்கமுமின்றி தோ்வை எழுதி வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் மஞ்சுளா, மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com