15 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய இருவா் கைது

பென்னாகரத்தில் 15 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய இருவரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு படையினா் கைது செய்தனா்.

பென்னாகரத்தில் 15 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய இருவரை குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு படையினா் கைது செய்தனா்.

பென்னாகரம் பகுதியில் உள்ள தனியாா் எண்ணெய் ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையில், உதவி ஆய்வாளா் செந்தில் முருகன், சிறப்பு ரோந்து காவல் படை உதவி காவல் ஆய்வாளா்கள் முரளி, ராமச்சந்திரன், தலைமைக் காவலா் செந்தில்குமாா், வேணுகோபால், பூவரசன், செல்வம் ஆகியோா் கொண்ட குழுவினா் பென்னாகரம் புறவழிச் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் எண்ணெய் ஆலையில் சோதனையிட்டனா்.

அதில், ஆலையின் பின்பகுதியில் உள்ள குடோனில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்ததாக பென்னாகரம் அருகே அளேபுரம் பகுதியைச் சோ்ந்த பசுவராஜ் (52), எண்ணெய் ஆலை உரிமையாளா் வள்ளுவன் (57) ஆகியோரை கைது செய்தனா். பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com