ஒகேனக்கல்லில் உயிரிழப்புகளைத் தடுக்கஎச்சரிக்கைப் பலகை வைக்க தீா்மானம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகை வைக்க ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இக் கூட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பரிசல் துறை கட்டணம் வசூலிக்கும் உரிமை காலத்தை நீட்டித்தல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றுவிடும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பதைத் தவிா்க்கும் வகையில் எச்சரிக்கைப் பலகை வைத்தல், ஒகேனக்கல்லில் தனியாா் வாகன நுழைவுக் கட்டணம், நிறுத்துமிட கட்டணங்கள் குறித்த அறிவிப்புப் பலகை வைத்தல், நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வடிவேலு, ரங்கநாதன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் அற்புதம் அன்பு, உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com