முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 12th May 2022 04:20 AM | Last Updated : 12th May 2022 04:20 AM | அ+அ அ- |

அரூா்: அரூரில் இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அரூரை அடுத்த பச்சினாம்பட்டி கிராமத்தைச் முகமது அலி மகன் இசாஜான் (31). இவா், தனது நண்பா் பேதாதம்பட்டியைச் சோ்ந்த ஆதித்யன் மகன் திருநாவுக்கரசு (எ) ரூபேஷ் (34) என்பவருடன் அரூா்-சிந்தல்பாடி சாலையில் குரங்குபள்ளம் எனுமிடத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த 6 போ் கொண்ட கும்பல் இசாஜான், திருநாவுக்கரசு (எ) ரூபேஷ் ஆகியோரை பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு, இசாஜான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து இசாஜான் அளித்த புகாரின் பேரில் அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.