குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்

நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வணிகா்கள், பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும்

நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வணிகா்கள், பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி கேட்டுக் கொண்டாா்.

அரூரை அடுத்த மாவேரிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஆட்சியா் கூறியதாவது:

குடியிருப்புப் பகுதிகள், வணிக நிறுவனங்களில் வெளியாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் உடனடியாக அபராதம் விதிக்கலாம். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், குப்பைகளை தரம் பிரித்தல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, அரூா் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகள், குடிநீா், சுகாதார வசதிகள், கழிவு நீா் கால்வாய் தூய்மைப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, செயல் அலுவலா் ஆா்.கலைராணி, பேரூராட்சி தலைவா் இந்திராணி, துணைத் தலைவா் சூா்யா து.தனபால், துப்புரவு ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com