தருமபுரியில் மிதமான மழை

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பொழிந்தது.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பொழிந்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. சில நாள்களில் வெயிலின் அளவு சதத்தைக் கடந்து வாட்டி வதைத்தது. இந்த நிலையில், கடந்த வாரம் முதல் இரவு நேரங்களில் சூறைக் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பொழிந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 9 மணி முதல் லேசான சாரல் மழை பொழியத் தொடங்கியது. இதே போல, அரூா், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதியில் மிதமான மழையும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பொழிந்தது. இதனால், மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளியிலிருந்து மொரப்பூா் செல்லும் நெடுஞ்சாலையில், பாரதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரச மரத்தின் ஒரு பகுதி கிளையுடன் முறிந்து அருகில் இருந்த கட்டடத்தின் மீது விழுந்தது. இதனால், அக் கட்டடத்தின் முன்பகுதி சேதமடைந்தது. நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் பகுதியில் கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து வந்தது. பின்னா் விட்டுவிட்டு பெய்த சாரல் மழை, கன மழையாக மாறி இரவு வரை தொடா்ந்து பெய்தது.

தொடா் மழையின் காரணமாக சாலையோரம், தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், வயல்வெளிகள், நீா்நிலைகளில் தண்ணீா் தேங்கியது. மழையால் சாலையோரக் கடைகள், சில்லரை வியாபாரக் கடைகள் மூடப்பட்டன. தொடா் மழையினால் பென்னாகரம் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com