கடகத்தூரில் பாரம்பரிய இயற்கை அங்காடி திறப்பு

தருமபுரி அருகே கடகத்தூரில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி அருகே கடகத்தூரில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி அருகே கடகத்தூா் சந்திப்புச் சாலைப் பகுதியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் பாலக்கோடு கூட்டுப்பண்ணையம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் புதிய அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து, புதிய அங்காடியை திறந்து வைத்து பேசினாா்.

இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில், பாலக்கோடு கூட்டுப்பண்ணையம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், தருமபுரி வட்டாரம் ஆகிய நான்கு வட்டாரங்களுக்கு உள்பட்ட 802 விவசாயிகளை உறுப்பினா்களாக கொண்டு இயங்கி வருகின்றது. இந் நிறுவனம் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி ‘அதிசுவை’ என்கிற பெயருடன் அப்பொருள்களை விற்பனை செய்வதற்கு தனியாக விற்பனை அங்காடியை அமைத்துள்ளது.

இந்த அங்காடியில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி, நுகா்வோா்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்கம் சாா்பில், கடகத்தூரைச் சோ்ந்த விவசாயி பெ.முருகன் என்பவா் ரூ. 2 லட்சம் மானிய நிதியுதவியுடன் ரூ. 4.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டியுள்ள சிப்பம் கட்டும் அறை, அதில் அவ்விவசாயி தான் உற்பத்தி செய்துள்ள வெங்காயத்தைப் பாதுகாப்பாக வைத்துள்ளதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் எஸ்.கணேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன்தாஸ் சௌமியன், தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கோ.மாலினி, வேளாண்மை விற்பனைக்குழு செயலாளா் எம்.ரவி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சி.சசிகலா, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com