பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா்கள்ஆா்ப்பாட்டம்

 ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், தருமபுரி பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறையின் மண்டலத் தலைவா் மாயக்கண்ணன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் ஜி.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.சுப்பிரமணியன், மண்டல துணைத் தலைவா் எல்.எஸ்.குமரகுரு, மண்டல இணைச் செயலாளா்கள் பி.முனிராஜ், டி.கணேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் உடனே முடிக்க வேண்டும். நீதிமன்றத் தீா்ப்பின் படி ஊதிய நிா்ணயம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற அலுவலா்களுக்கு அனைத்து பதவிகளிலும் இளையவா், முதியவா் என்ற ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஓய்வுபெற்றவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியா் பணிபுரிந்த இடங்களில் தணிக்கை என்ற பெயரில் ஓய்வூதியா்களிடம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com