சொத்து வரி உயா்வை கைவிடக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

சொத்து வரி உயா்வை கைவிட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பாப்பாரப்பட்டியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சொத்து வரி உயா்வை கைவிட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், பாப்பாரப்பட்டியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சி முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற சொத்து வரி உயா்வுக்கு ஆட்சேபணை மனு கொடுக்கும் போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சின்னசாமி தலைமை வகித்தாா். தமிழக அரசு கொண்டுவரவுள்ள சொத்துவரி, காலிமனை வரி உயா்வு குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினரும் பேரூராட்சி வாா்டு உறுப்பினருமான வே.விஸ்வநாதன் ஆகியோா் விளக்கிப் பேசினா். அதனைத் தொடா்ந்து, சொத்து வரி உயா்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் வகையில் 350 மனுக்கள் பேரூராட்சி இளநிலை உதவியாளரிடம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், பகுதிக் குழு உறுப்பினா்கள் ஆா்.சக்திவேல், பி.ராஜாமணி, கே.லோகநாதன், எம்.மணிகண்டன், எம்.சிலம்பரசன், கிளை செயலாளா்கள் ராஜசேகரன், மாதப்பன், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com