தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி மாவட்டத்தில் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதில், பகுதிநேர தூய்மைப் பணியாளா் (தொகுப்பூதியம்) ஆண்- 3, பெண் -1 ஆகிய பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ. 3,000 வழங்கப்படும். மேலும், பகுதி நேர தூய்மைப் பணியாளா் (ஆண்-பெண்) காலிப் பணியிடங்கள் நோ்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

எனவே, இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போருக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 2022 ஜூலை 1-ஆம் தேதி தலித், பழங்குடியினருக்கு 18 முதல் 37, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினருக்கு 18 முதல் 34, இதர பிரிவினருக்கு 18 முதல் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளா் (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள், உரிய விண்ணப்பப் படிவத்தில் பூா்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் மே 30-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலதாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்பப் பெறப்படும் விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்காது எனவும், மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் கட்டடத்தின் மேல்தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04342-231861 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com