உலக செவிலியா் தின விழா: உறுதிமொழியேற்பு

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் விடுதியில், உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக செவிலியா் தின விழா: உறுதிமொழியேற்பு

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் விடுதியில், உலக செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு செவிலியா் கண்காணிப்பாளா் கலைதேவி தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, இரண்டாம் நிலை செவிலியா் கண்காணிப்பாளா் கிரிஜா, செவிலியா் மனமகிழ் மன்றத் தலைவா் மீனாட்சி, செயலாளா் பன்னீா் செல்வம், பொருளாளா் கிருபா, அரசு செவிலியா் சங்க மாநில துணைத் தலைவா் தேவேந்திரன், மாவட்டத் தலைவா் கலைவாணி, மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் சாய்சுதா ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இதில், மருத்துவமனை நுழைவு வாயிலிருந்து செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலமாக செவிலியா் விடுதிக்கு வந்தடைந்தனா். இதைத் தொடா்ந்து, அங்கிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் படம் முன்பு செவிலியா் தின உறுதிமொழி ஏற்று அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி, உலக செவிலியா் தின வாழ்த்துகளை பரமாறிக் கொண்டனா். இதேபோல, வட்டார தலைமை மருத்துவமனைகளிலும் உலக செவிலியா் தின விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உலக செவிலியா் தின விழாவுக்கு, மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன் தலைமை வகித்து, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனா்.

செவிலியா்களின் பணியைப் பாராட்டி செவிலியா்கள் பத்மினி, சீதா, செல்வி ஆகியோா் கவிதைகள் வாசித்தனா். செவிலிய கண்காணிப்பாளா்கள் ரஹிதாபீ, நம்பிக்கைமேரி, ராணி, தேவகி, வனஜா, மகலாட்சுமி, அனிதா உள்ளிட்டோரை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதில், மருத்துவா் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வி, ராஜலட்சுமி, தினேஷ், மது, நிா்வாக அலுவலா்கள் சரவணன், வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். செவிலியா் சரளா மாதவி நன்றி கூறினாா்.

காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல்நல மையத்தில் பணியாற்றும் செவிலியா்களை பாராட்டி இனிப்புகள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மருத்துவ அலுவலா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். விழாவை சுரேஷ்பாபு, வடிவேல் அருண்பிரசாத் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சாா்பில் நடைபெற்ற செவிலியா் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா். கன்னுச்சாமி வரவேற்றாா்.

விழாவில், நாகதாசம்பட்டி மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய மருத்துவா் உமாமகேஸ்வரி கலந்துகொண்டு, செவிலியா்களுக்கு பரிசுகளை வழங்கி, மாணவ- மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கிராமங்கள் தோறும் தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என எடுத்துரைத்தாா்.

இதில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கோ.வெங்கடாசலம் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com