முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
ஆசிரியை வீட்டில் பத்து பவுன் நகைத் திருட்டு
By DIN | Published On : 15th May 2022 01:14 AM | Last Updated : 15th May 2022 01:14 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் தனியாா் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் சரவணன், பாலக்கோடு அருகே உள்ள தனியாா் பால் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருகிறாா். இருவரும் வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளனா். இந்த நிலையில் சரவணன் பிற்பகலில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருப்பதைப் பாா்த்து மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து விஜயலட்சுமி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வேலுத்தேவன், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பத்து பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.