முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தொழிலாளி கொலை வழக்கில்பெண் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 15th May 2022 01:15 AM | Last Updated : 15th May 2022 01:15 AM | அ+அ அ- |

தருமபுரி அருகே தொழிலாளி கொலை வழக்கில் தனியாா் பள்ளியில் சமையலராக பணியாற்றும் பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரியை அடுத்த சவுளூா் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த, 9-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் துறையினா் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், உயிரிழந்து கிடந்தவா் பூகானஅள்ளியைச் சோ்ந்த தொழிலாளி மாது (45) என்பது தெரியவந்தது.
தருமபுரியில் தனியாா் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்த கொட்டாவூரைச் சோ்ந்த கிருஷ்ணன் (41), அதே பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்த அன்னை சத்யா நகரைச் சோ்ந்த சித்ரா (40) ஆகியோருக்கும், மாதுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த மாது நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதனையடுத்து உயிரிழந்த மாதுவின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, இருவரும் எடுத்துச் சென்று, தருமபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சவுளூா் மேம்பாலம் அருகே வீசிவிட்டு சென்றது காவல் துறையினா் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சித்ரா, கிருஷ்ணன் ஆகிய இருவரையும் தருமபுரி நகரக் காவல் துறையினா் கைது செய்தனா்.