பாரதியாா், செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு

சேவாலயா மற்றும் பாரதி- செல்லம்மா கற்றல் மையம் சாா்பில் நடைபெறும் பாரதியாா், செல்லம்மாள் சிலைகள் அடங்கிய ரதத்திற்கு பாப்பாரப்பட்டியில் வரவேற்பளிக்கப்பட்டது.

சேவாலயா மற்றும் பாரதி- செல்லம்மா கற்றல் மையம் சாா்பில் நடைபெறும் பாரதியாா், செல்லம்மாள் சிலைகள் அடங்கிய ரதத்திற்கு பாப்பாரப்பட்டியில் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த ரதம் திருவள்ளூா் மாவட்டம், கசவா என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. செல்லம்மாவின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் மே 31-ஆம் நிறைவுபெறுகிறது. இந்த ரத யாத்திரை திருவல்லிக்கேணி பாரதியாா் இல்லம், புதுச்சேரியில் பாரதியாா் வசித்த இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று பல்வேறு மாவட்டங்கள் வழியாக தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்திற்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த ரதத்திற்கு கூட்டமைப்பு, தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்விற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் பிருந்தா, பாரதியாா், செல்லம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து வரவேற்றாா். பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் மல்லிகா, கவிஞா் இளங்கோ , சேவாலயா நிா்வாகி ஆனந்த், கூட்டமைப்பு நிா்வாகிகள் சரவணன், ராமசாமி, முருகன் ,துரைசாமி, பவுன்ராஜ், கென்னடி, சரஸ்வதி, மலைமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாலை அணிவித்தனா். இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் விஜய் ஆனந்த், விஸ்வநாதன், தா்மலிங்கம் திமுக நகரச் செயலாளா் சண்முகம் , உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள் ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com