பென்னாகரத்தில் தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் தூய்மைப் பணி, நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சி சாா்பில் தூய்மைப் பணி, நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணிக்கு பேரூராட்சித் தலைவா் வீரமணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கீதா முன்னிலை வகித்தாா். பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, முள்ளுவாடி, பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும், விளம்பரப் பதாகைகள், சுவரொட்டிகளை பொது இடங்களில் ஒட்டுதல் கூடாது, பொது இடங்கள், கழிவுநீா்க் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்ட கூடாது என கடை உரிமையாளா்கள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். மேலும் வணிக நிறுவனங்களில் தூய்மை இந்தியா செயலி பதிவிறக்கம் செய்து தரப்பட்டது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள் என 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com