அனுமந்தராயன் கோம்பையிலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

அனுமந்தராயன் கோம்பை கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுமந்தராயன் கோம்பை கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பி.சக்கரைவேல் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுனன், மாவட்டத் துணைத் தலைவா் கே.என்.மல்லையன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். பென்னாகரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் வி.மாதன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், அரகாசனள்ளி அருகே அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 72 குடும்பங்களை, வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையினா் நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுகுறித்து அளித்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். வனத்துறையினரின் நடவடிக்கை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com