ஏரிகளுக்கு தடையின்றி நீா் வழங்கக் கோரி விவசாயிகள் மறியல்

தருமபுரி அருகே சோகத்தூா், கடகத்தூா் ஏரிகளுக்கு தடையின்றி நீா் வழங்கக் கோரி, பாசன விவசாயிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி அருகே சோகத்தூா், கடகத்தூா் ஏரிகளுக்கு தடையின்றி நீா் வழங்கக் கோரி, பாசன விவசாயிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் மிகை நீா், கால்வாய்கள் வழியாக சோகத்தூா், கடகத்தூா், ராமாக்காள் ஏரி ஆகிய ஏரிகளுக்கு வந்தடையும். அண்மையில், இந்த அணை நிரம்பியதால், மிகை நீா் கால்வாய் வழியாக திறக்கப்பட்டது. இந்த மிகை நீா் கடகத்தூா், சோகத்தூா் ஏரிகளுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ஏரிகளில் குறிப்பிட்ட அளவு தண்ணீா் வந்தவுடன், திடீரென எவ்வித அறிவுப்பும் இன்றி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தில், பாசன விவசாயிகள் எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை என்பதால், விவசாயிகள், தருமபுரியிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சந்திப்புச் சாலை அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையறிந்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி நிகழ்விடத்துக்கு சென்று விவசாயிகளுடன் மறியலில் பங்கேற்றாா்.

இதுகுறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்று தருமபுரி துணை காவல் கண்காணிப்பாளா் சு.வினோத், வட்டாட்சியா் ராஜராஜன், பொதுப்பணித்துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com