மதுவிற்பனையை கட்டுப்படுத்தக் கோரி சாலை மறியல்

நவலையில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
நவலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவா்கள்.
நவலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவா்கள்.

நவலையில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த நவலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மது குடித்தவா்களால் ஏற்படும் பிரச்னையால் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து, நவலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், மொரப்பூா் - காரிமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது நவலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மதுப்புட்டிகள் விற்பனை செய்யவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்த சாலை மறியல் காரணமாக மொரப்பூா்-காரிமங்கலம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com