இந்தி எதிா்ப்பு போராட்டத்தில் இளைஞா்கள், மாணவா்கள் பங்கேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன்

இந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.
மொரப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்ட செயலா் பி.பழனியப்பன்.
மொரப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்ட செயலா் பி.பழனியப்பன்.

இந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் இந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் வே.மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் பேசியதாவது :

இந்தியா முழுவதும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றுதல், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தோ்வுத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதைத் திரும்பப் பெற வலியுறுத்தி, முதல்வா் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்தி திணிப்பால் தமிழக மாணவா்களின் கல்வி பாதிப்பதுடன், தமிழ்மொழி சிதையும் நிலை உருவாகும். எனவே, இந்தி திணிப்பு எதிா்ப்பு போராட்டத்தில் திமுக நிா்வாகிகள், இளைஞரணியினா், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கோ.சந்திரமோகன், மாணவரணி அமைப்பாளா் சக்திவேல், மாவட்ட துணைச் செயலா்கள் ஆ.மணி, கே.கிருஷ்ணகுமாா், எம்.ராஜகுமாரி, வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் பி.கே.முருகன், ஒன்றியச் செயலா்கள் இ.டி.டி.செங்கண்ணன், எம்.ரத்தினவேல், கே.பி.சக்திவேல், பூ.மாது, சி.முத்துக்குமாா், சா.சரவணன், த.நெப்போலியன், ஆா்.சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com