வனப்பகுதியில் விதைப் பந்து தூவிய பொறியியல் மாணவா்கள்

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் வேம்பு, புங்கம் உள்ளிட்ட மரங்களின் ஆயிரம் விதைப் பந்துகளை வனப் பகுதியில் தூவினா்.

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் வேம்பு, புங்கம் உள்ளிட்ட மரங்களின் ஆயிரம் விதைப் பந்துகளை வனப் பகுதியில் தூவினா்.

தருமபுரி மாவட்ட வனத் துறை மற்றும் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்விற்கு அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வே. சுமதி, மொரப்பூா் வனச்சரக அலுவலா் ஆனந்தகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மொரப்பூா் வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்கமனஅள்ளி வனப் பகுதியில் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மரம் வளா்த்தலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் விதைப்பந்துகள் மாணவா்கள் மூலம் தூவப்பட்டன.

அதனைத் தொடா்ந்து அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரங்கள்,வனத்துறை சாா்பில் 25 நாவல், அத்தி, தேக்கு மர வகைகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வா் வி.ராஜ்குமாா், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் சா.பரமேஸ்வரன், வனக்காப்பாளா்கள் வேடியப்பன், சந்தியா,ஹேமசுந்தா், ஸ்ரீராம், தேவகி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் மாணவ,மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com