5 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை:ஆட்சியா் கி.சாந்தி தகவல்

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் 5.15 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
கம்பைநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.
கம்பைநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் 5.15 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

கம்பைநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் பள்ளி மாணவியா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி அவா் பேசியதாவது:

தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையம், அரசு, தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் 5.15 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டோசல்) வழங்கப்படும். இதேபோல 20 முதல் 30 வயது வரையிலான 1.22 லட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.

இப் பணியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது. எனவே, அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது அவசியம் என்றாா்.

இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள், கம்பைநல்லூா் பேரூராட்சித் தலைவா் வடமலை முருகன், வட்டார மருத்துவ அலுவலா் கே.அரசு, அரசு மருத்துவா் ஆா்.சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com