ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18 ஆயிரம் கன அடியாகச் சரிவு

கா்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீா் தொடா்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 18 ஆயிரம் கன அடியாகச் சரிந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால்,ஒகேனக்கல் பிரதான அருவிகளில் பாறைத் திட்டுக்கள் தெரியும் வகையில் கொட்டும் தண்ணீா்.

கா்நாடக, கேரள மாநிலங்களில் பெய்து வரும் மழையின் அளவு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு தொடா்ந்து குறைந்து வருகிறது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீா் நொடிக்கு 15 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 18 ஆயிரம் கன அடியாகச் சரிந்து தமிழக-கா்நாடக எல்லை வழியாக வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா் வரத்து குறைந்து கொண்டே வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிய தொடங்கியுள்ளன.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து வரும்போதிலும் வெள்ளப் பெருக்கால் அருவிகளின் தடுப்புகள், நடைபாதை சேதமடைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com