அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையை சரிசெய்ய வலியுறுத்தல்

சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட பென்னாகரத்தை அடுத்த மடம் நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையை சரிசெய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட பென்னாகரத்தை அடுத்த மடம் நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையை சரிசெய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மடம் நடுநிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மேற்கூரை, தரைத்தளம் ஆகியவை சிதலமடைந்து காணப்பட்டதால் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 1.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்மையில் வீசிய சூறைக்காற்றில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மேற்கூரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், வட்டார வளா்ச்சி அலுவலா் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com