ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால் எண்ணெய் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனா். பிறகு மீன்களை வாங்கி சமைத்து உணவு அருந்தினா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால் மீன் விற்பனை நிலையங்களில் கிலோ மீன் ரூ. 300 முதல் ரூ. 2000 வரை விற்பனையானது. வாகனங்களை நிறுத்தங்களில் நிறுத்த முடியாமல் அவதிப்பட்ட சுற்றுலாப் பயணிகள் சின்னாறு நீா் அளவிடும் பகுதி, காவல் நிலையம், தமிழ்நாடு ஹோட்டல் வாகனம் நிறுத்துமிடம், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தினா்.

ஒகேனக்கலின் முக்கிய இடங்களான பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், பூங்காக்கள், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப்பாா்த்த பயணிகளின் தேவைக்கு ஏற்ப ஒகேனக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com