தருமபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, சத்துணவு ஊழியா்கள் கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.காவேரி தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி, மாவட்டச் செயலாளா் தேவகி, மாவட்டப் பொருளாளா் பி.வளா்மதி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் இ.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு ரூ. 9,000 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்களிடமே வழங்க வேண்டும். 6 மாதமாக நிலுவையில் உள்ள மானியத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ராதா, காந்திமதி, மாவட்ட இணைச் செயலாளா்கள் லட்சுமி, சுமதி, மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகதாம்பிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணைச் செயலாளா் சாந்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா். தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மெழுகுவா்த்தியை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com