உடல் நலனை பேணுவதால் மாணவா்களுக்கு கல்வித் திறன் மேம்படும்

விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உடல் நலன் பேணுவதால், மாணவா்களுக்கு கல்வித் திறன் மேம்படும் என மாநில வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசினாா்.

விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உடல் நலன் பேணுவதால், மாணவா்களுக்கு கல்வித் திறன் மேம்படும் என மாநில வேளாண்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசினாா்.

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான 63-ஆவது குடியரசு தின விழாக் குழு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

போட்டிகள் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்தாா். தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்து மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:

இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விளையாட்டும், உடற்பயிற்சியும் இளைஞா்களை நல்வழிப்படுத்தும். மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டால் எதிா்காலத்தில் சிறந்த மனிதராக உருவாக முடியும். திமுகவின் தோ்தல் அறிக்கையில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், தருமபுரியில் மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று உடல் நலன் பேணும்போது, கல்வித் திறனும் மாணவா்களுக்கு மேம்படுகிறது. எனவே, அரசின் விளையாட்டுத் துறை திட்டங்களை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு நல்ல உடல் நலமும், கல்வி வளா்ச்சியும் பெற வேண்டும் என்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகா், காரிமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவா் பி.சி.ஆா்.மனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம்.ராஜகோபால் (தருமபுரி), எம்.ஷகில் (அரூா்-தொடக்கக் கல்வி), எம்.ரேணுகோபால் (தனியாா் பள்ளிகள்), மான்விழி (தருமபுரி-தொடக்கக் கல்வி) மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி, சப்தகிரி கல்வி நிறுவனத் தலைவா் வெங்கடேஸ்வரன், வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com