தை அமாவாசை: காவிரிக் கரையில் தா்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்
By DIN | Published On : 22nd January 2023 03:12 AM | Last Updated : 22nd January 2023 03:12 AM | அ+அ அ- |

தை மாத அமாவாசையில் காவிரிக் கரையில் தா்ப்பணம் செய்யக் குவிந்த பொதுமக்கள்.
தை மாத அமாவாசையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரிக் கரையில் ஏராளமானோா் குவிந்தனா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரைக்கு மாதந்தோறும் அமாவாசையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூா், பென்னாகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனா். இந்த நிலையில் தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை காவிரிக் கரையோரத்தில் ஏராளமானோா் குவிந்தனா். காவிரிக் கரையோர பகுதிகளான முதலைப்பண்ணை மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் தா்ப்பணம் செய்து புனித நீராடி அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.