மது புட்டிகள் விற்பனை: 6 போ் கைது

 அரசு அனுமதியின்றி மது புட்டிகள் விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

 அரசு அனுமதியின்றி மது புட்டிகள் விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி மது புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, இருமத்தூா், குருபரஹள்ளி, சிந்தல்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அனுமதியின்றி டாஸ்மாக் மது புட்டிகளை விற்பனை செய்ததாக ஜெயவேலின் மனைவி ராஜம்மாள் (70), முனுசாமியின் மகன் காா்த்திக் (41), பெருமாளின் மனைவி லோகம்மாள் (50), நடராஜின் மகன் சுகுமாா் (35), அங்கமுத்துவின் மகன் எம்ஜி (53), சீனிவாசனின் மனைவி ராஜம்மாள் (57) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 269 மது புட்டிகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com