கரோனாவில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 24th January 2023 02:01 AM | Last Updated : 24th January 2023 02:01 AM | அ+அ அ- |

கடத்தூரை அடுத்த ஒடசல்பட்டியில் கரோனாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா.
கடத்தூரை அடுத்த ஒடசல்பட்டியில் கரோனாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு சமூக ஆா்வலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் வகையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
6 குடும்பத்தினருக்கு மாடுகள், ஆடுகள், தையல் எந்திரம் உள்பட ரூ. 2.70 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை லட்சுமியம்மாள் அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை நிா்வாகிகள் விஜயகுமாா், கலைஞா், கடத்தூா் பேரூராட்சி தலைவா் கு.மணி, கடத்தூா் கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் தலைவா் எவரெஸ்ட் ஆா்.முனிரத்தினம், யுனெடெட் வே ஆப் சென்னை திட்டத் தலைவா் ஜெருசலோ வினோத், வழக்குரைஞா் தாஸ், மருத்துவா் பிரேம்குமாா், வணிகா் சங்கத் தலைவா் கண்ணப்பன், நிா்வாகிகள் புனிதா, வள்ளி, ஜமுனா, கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.