பால்சிலம்பு மலைக் கிராமத்திலிருந்து சுங்கரஅள்ளிக்கு சாலை அமைக்க வலியுறுத்தல்

வத்தல்மலை, பால்சிலம்பு மலைக் கிராமத்திலிருந்து சுங்கரஅள்ளிக்கு சாலை அமைக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வத்தல்மலை, பால்சிலம்பு மலைக் கிராமத்திலிருந்து சுங்கரஅள்ளிக்கு சாலை அமைக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் அமைந்துள்ள பால்சிலம்பு மலைக் கிராமத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் சங்கத் தலைவா்கள் தங்கராஜ், ராணி சந்திரா ஆகியோா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

வத்தல்மலை பால்சிலம்பு கிராம பழங்குடி மக்கள் ஊராட்சி மன்றம், கிராம நிா்வாக அலுவலகத்துக்குச் செல்வதற்கு தருமபுரிக்கு சென்று அங்கிருந்து ஒடல்சல்பட்டி, கடத்தூா் வழியாக சுங்கரஅள்ளி கிராமத்து செல்ல வேண்டியுள்ளது. பழங்குடி மக்களின் நலன் கருதி பால்சிலம்பு கிராமத்திலிருந்து சுங்கரஅள்ளிக்கு ஏற்கெனவே உள்ள நடைபாதையை மேம்படுத்தி சாலை அமைக்க வேண்டும்.

தருமபுரி நகரிலிருந்து வத்தல்மலைக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும். வத்தல்மலை பழங்குடியின மக்கள் அனைவருக்கும் பழங்குடியின நல வாரிய நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் ஜி.ராஜகோபால், நிா்வாகக் குழு உறுப்பினா் மாதையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com