புகா், நகரப் பேருந்து நிலையங்களில் ரூ. 1.34 கோடியில் மேம்பாட்டு பணிநகா் மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி புகா், நகரப் பேருந்து நிலையங்களை ரூ. 1.34 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிக்கு நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி புகா், நகரப் பேருந்து நிலையங்களை ரூ. 1.34 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிக்கு நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்டம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா், நகராட்சி துணைத் தலைவா் நித்யா அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தருமபுரி நகராட்சியில் உள்ள புகா், நகரப் பேருந்து நிலையங்களை ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணி, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி, கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, தடங்கம் கிராமத்தில் உள்ள உரக்கிடங்கில் அடிக்கடி மா்ம நபா்கள் தீ வைக்கும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் பிரிக்கும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது ஆகிய பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்தின்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒளிராமல் உள்ள மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகா்மன்ற உறுப்பினா்கள் பேசினா்; திமுக, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள், சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com