உரம் இருப்பு குறித்து ஆய்வு

தருமபுரி மாவட்ட சேமிப்புக் கிடங்கில், உரம் இருப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட சேமிப்புக் கிடங்கில், உரம் இருப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்ட சேமிப்புக் கிடங்கில் நிகழ் பருவத்துக்கு வேளாண் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள உரம் இருப்பு குறித்து வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலா் தா.தாம்சன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில், டிஏபி 513 டன், காம்ப்ளக்ஸ் 633 டன், யூரியா 11 டன், இயற்கை உரம் 35 டன் என மொத்தம் 1192 டன் உரம் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உரம் விற்பனை நிலையங்களுக்கான உர விநியோகத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது இப்கோ நிறுவன தருமபுரி மாவட்ட விற்பனை அலுவலா் அப்துல்லா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன அலுவலா் மதலைசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com