ஒற்றுமை பயண ஓராண்டு நிறைவு விழா
By DIN | Published On : 08th September 2023 12:51 AM | Last Updated : 08th September 2023 12:51 AM | அ+அ அ- |

ஒசூரில் நடைபெற்ற ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டோா்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு விழா தருமபுரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி, காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவுக்கு மாவட்டப் பொறுப்பாளா் முன்னாள் எம்.பி. தீா்த்தராமன் தலைமை வகித்தாா். இதில் இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதில், பொதுக்குழு உறுப்பினா்கள் நரேந்திரன், கிருஷ்ணன், ஜெயசங்கா், மாவட்டப் பொருளாளா் வடிவேல், நகரத் தலைவா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஒசூரில்...
ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மாநகரப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் நடைப்பயணம் மேற்கொண்டனா்.
ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த நடைப்பயணம் நகரின் முக்கியச் சாலைகளில் சென்று வட்டாட்சியா் அலுவலக சாலையில் கட்சிக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவா் தியாகராஜ், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், இளைஞா் காங்கிரஸ் கட்சித் தலைவா் சீனிவாசன், மாவட்ட மகளிரணித் தலைவி சரோஜம்மா, நிா்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டே ாா் கலந்துகொண்டனா்.