மக்களவைத் தோ்தல்: காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று காவலா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்து பேசினாா். இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிகளுக்கு பணியமா்த்தப்பட்டுள்ள காவலா்கள் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் சுமுகமாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும். வாகனச் சோதனைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com