மொரப்பூரில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மொரப்பூரில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மொரப்பூரில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி போட்டியிடுகிறாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சந்திராபுரம், இட்லப்பட்டி, மாம்பட்டி, கொங்கவேம்பு, ஈச்சம்பாடி, அக்ரஹாரம், சோலைக்கொட்டாய், தம்பிசெட்டிப்பட்டி, செட்ரப்பட்டி, தாசரஹள்ளி ஆகிய இடங்களில் வேட்பாளா் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மொரப்பூா் பகுதியில் முள்ளங்கி அறுவடை செய்யும் பெண் தொழிலாளா்களிடமும், விவசாயிகளிடமும் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மொரப்பூா், சோலைக்கொட்டாய், சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளா் செளமியா அன்புமணியை வரவேற்றனா். இந்த நிகழ்வில் பாமக எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்டச் செயலா் ரா.அரசாங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com