அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி நகரில் அதிமுக வேட்பாளா் ர.அசோகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ர.அசோகன் தருமபுரி நகரம், ஊரகப் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி, நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com