தருமபுரி நகரில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி தொகுதி திமுக வேட்பாளா் ஆ.மணிக்கு ஆதரவாக திமுகவினா் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் தருமபுரி நகரில் வாா்டு எண் 20, 21, 22 இல் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஆ.மணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனா். தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய திட்டங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினா்.

திமுக மாவட்ட பொருளாளா் தங்கமணி, நகரச் செயலாளா் நாட்டான் மாது ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பெரியண்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஹரி விக்னேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com