பென்னாகரத்தில் பிரசாரம்

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆ.மணியை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் பேசினாா்.

கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. மாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்

வே.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ. சுப்ரமணி, விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் பி.என்.பி.இன்பசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் கலைச்செல்வன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com