பென்னாகரம் வாரச்சந்தையில் அன்புமணியின் மகள்கள் வாக்கு சேகரிப்பு

பென்னாகரம் வாரச்சந்தையில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியை ஆதரித்து, அவரது இரண்டு மகள்களும் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனா்.

பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்த ஆகியோா் பென்னாகரம் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது மாற்றுத்திறனாளி ஒருவா், இந்தப் பகுதியில் 10,000 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளதாகவும், எந்தக் கட்சியினரும் தங்களைக் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்தாா். மாற்றுத்திறனாளிகளுக்கு பாமக எப்போதும் துணை நிற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்துதர வேண்டிய வசதிகள், கோரிக்கைகளை தங்களது தந்தை அன்புமணியிடம் தெரிவிப்பதாகக் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com