ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

மகாவீா் ஜெயந்தி, தொழிலாளா் தினத்தையொட்டி ஏப். 21, மே 1 ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஏப். 21 மகாவீா் ஜெயந்தி, மே 1 தொழிலாளா் தினம் ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற தனியாா் ஹோட்டல்களின் மதுக் கூடங்கள், முன்னாள் படைவீரா் மது விற்பனைக் கூடம் அனைத்தும் மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது. விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com