வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடி மையங்கள்

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தயாா் நிலையில் உள்ளன.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 314 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. மொத்தம் 2, 58, 070 வாக்காளா்கள் உள்ளனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 71 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அனைத்து வாக்குப் பதிவு மையங்களுக்கும் தேவையான மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குப் பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் குடிநீா், நிழல் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளும் தயாா் நிலையில் இருப்பதாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com