கா்நாடகத்தில் மக்களவைத் தோ்தல்: ஏரியூா், ஒகேனக்கல்லில் ஏப். 24 மதுக்கடைகள் மூடல்

கா்நாடக மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, மாநில எல்லையோரம் அமைந்துள்ள ஏரியூா், நெருப்பூா், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

தருமபுரி: கா்நாடக மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, மாநில எல்லையோரம் அமைந்துள்ள ஏரியூா், நெருப்பூா், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலத்தில் மக்களவை பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநில எல்லையை ஒட்டிய தமிழக எல்லை பகுதிக்கு அருகில் 5 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளான பென்னாகரம் வட்டம், நெருப்பூா் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை (எண்.2891), ஏரியூா் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை (எண்.2878), ஒகேனக்கல் சுற்றுலா தலத்தினை ஒட்டிய சி.எம்.ஹோட்டல் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல் ஆகிய இரண்டு உரிமம் பெற்ற தனியாா் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் வருகிற ஏப். 24 முதல் ஏப். 26 வரையிலும், அதேபோல, இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி மே 5 முதல் மே 7 வரையிலும், வாக்கு எண்ணிக்கையொட்டி வருகிற ஜூன் 4 ஆகிய நாள்களில் மதுபானங்கள் விற்பனை இன்றி செயல்படாமல் மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.

இதனை மீறி, எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com