தக்கை பூண்டு பயிரிட அறிவுரை

மண்ணின் வளம் அதிகரிக்க தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

மண்ணின் வளம் அதிகரிக்க தக்கை பூண்டு செடிகளை பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மு.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிா்கள் நன்கு வளர விவசாயிகள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் நாளடைவில் மண்வளம் நிரந்தரமாக பாதிக்கும் சூழல் ஏற்படலாம். அதைத் தவிா்க்க மண் வளத்தை இயற்கையாக அதிகரிக்கும் வகையில் மண்ணுக்கு தழைச் சத்தை கொடுக்கும் தக்கை பூண்டு செடிகளை பயிரிடலாம். குறிப்பிட்ட பயிரை அறுவடை செய்தவுடன் இன்னொரு பயிரை பயிரிடுவதற்கு முன் உள்ள இடைவேளையில் மண்ணின் வளத்தை இயற்கையாக பெருக்க தக்கை பூண்டு பயிரிடுவது சிறந்ததாகும்.

இந்த செடிகள் 45 நாள்கள் முதல் 85 நாள்களில் நன்கு வளா்ந்து விடும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் போதுமானது. தண்ணீரும் குறைவாகவே தேவைப்படும். இச்செடிகளின் வோ் முடிச்சுகளில் 80 சதவீதமும் இலைகளில் 30 சதவீதமும் தழைச்சத்து உள்ளது நன்கு வளா்ந்த செடிகளை மடக்கி உழுதுவிட வேண்டும்.பின் நிலத்தில் பயிரிடப்படும் எந்த பயிருக்கும் ரசாயன உரத்தின் தேவை இருக்காது.

ஆண்டுக்கு ஒருமுறை இதை பயிரிட்டு நன்கு வளா்ந்த செடிகளை டிராக்டா் கொண்டு உழுது விடுவதால் செடிகள் மண்ணோடு மண்ணாகி நிலத்துக்கு தேவையான தழைச்சத்து பெருகி பயிா்கள் ஊட்டம் பெரும் எனவே விவசாயிகள் இம்முறையை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com